Friday, October 22, 2010

உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி-யில் இருந்து விண்டோஸ் 7 வரை உள்ள
அனைத்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் உள்ள வைரஸ்
கோப்புகளை எளிதாக உடனடியாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்
தான் இந்த பதிவு.

நம் கணினியில் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் வைத்திருந்தால்
அடுத்த ஆண்டிவைரஸ்-க்கு தேவையான சில கோப்புகளை வைரஸ்
இருப்பதாக அறிவிக்கும். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் கோப்பை
வைரஸ் இருப்பதாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளும் மற்றொரு
ஆண்டிவைரஸ் மென்பொருள் வைரஸ் இல்லை என்றும் அறிவிக்கும்
இந்த நேரத்தில் நாம் அந்த கோப்பில் உண்மையாகவே வைரஸ்
இருக்கிறதா என்று  இந்த இணையதளம் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://joebox.org/submit.php
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் வைரஸ் இருக்கிறதா என்று
சோதிக்க விரும்பும் நம்முடைய கோப்புகளை choose என்ற பொத்தானை
அழுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் ஸ்கிரிப்ட் வைரஸ் இருப்பதாக
தோன்றினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அடுத்து எந்த
ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுக்க
வேண்டும். நம் இமெயில் முகவரியைம் கொடுத்து Analyse  என்ற
பொத்தானை அழுத்தி எளிதாக சோதிக்கலாம். சோதிக்கப்பட்டு
உடனடியாக நமக்கு இமெயில் மூலம் முடிவு அனுப்பப்படும். இதை
சோதிக்க இந்த இணையதளத்தில் எந்த கணக்கும் உருவாக்கத்
தேவையில்லை. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...