Friday, October 22, 2010

தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்

கணினி அதிகம் படித்தவர்களுக்கு தட்டச்சு செய்வதில் நேரம்
அதிகம் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஆராய்ச்சி முடிவு தான்
இந்த பதிவுக்கு காரணமாகிறது. ஆம் கணினியில் மென்பொருள்
துறையில் மட்டும் நாம் வல்லவர்களாக இருந்தால் போதாது
தட்டச்சு செய்வதிலும் வேகம் வேண்டும் அல்லவா இதற்க்காகத்
தான் இந்த பதிவு.


கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகமாக இருந்தால் பல
வேலைகளை விரைவாக முடிக்கமுடியும் என்ற செய்தி நமக்கு
தெரிந்தாலும் தட்டச்சு முறையாக படிக்கவில்லை என்ற வருத்தம்
ஒருபுறம் இருக்கட்டும். இல்லை தட்டச்சு படிக்க நேரம் உங்களுக்கு
அமையவில்லையா இப்படி நாம் தட்டச்சு படிக்க முடியாமல்
இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் தீர்வாக
இந்த இணையதளம் வந்துள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்று
கிடைக்கும் நேரத்தைப் பயன்ப்டுத்தி நாம் தட்டச்சு கற்கலாம் எந்த
கணக்கும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக
நாம் நம்முடைய தட்டச்சு வேகத்தை இந்த இணையதளம் மூலம்
அதிகப்படுத்தலாம்.
இணையதள முகவரி :  http://www.klava.org
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் இந்த தட்டச்சு இணையதளத்தைப்
பயன்படுத்தி நம் தட்டச்சு வேகத்தையும் எழுத்துப்பிழையையும் எளிதாக
திருத்தலாம். கண்டிப்பாக இந்த இணையதளம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...