Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts

Tuesday, September 18, 2012

இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு...



நாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்க் [BOOK MARK] செய்துவைப்பதுண்டு. ஆனால் Book Mark செய்யும் பக்கங்களை மீண்டும் பார்ப்பதற்கு இணையத் தொடர்பை ஏற்படுத்தினாலேயே அப் பக்கத்தினுள் நாம் செல்லமுடியும். இதற்காக நாம் அப் பக்கங்களை “Save Page As” என்பதை கொடுத்து சேமித்து[Save] வைப்பதுண்டு.
ஆனால் கல்வித்தளங்கள் அல்லது வேறு முக்கியமெனக் கருதும் வலைத்தளங்களின் பெரும்பாலான பக்கங்கள் அனைத்தும் எமக்கு அடிக்கடி தேவைப்ப்படுமெனின் அவ் வலைத்தளங்களின் எல்லாப் பக்கங்களையும் Save செய்து வைப்பதால் மீண்டும் நாம் அதனைப் பார்வையிடும்போது ஒவ்வொன்றாக Open செய்து பார்க்கவேண்டும். இது நேர விரையத்தையும் எரிச்சலையும் கூட எமக்குத் தரலாம்.



எனவே இதற்கு தீர்வைத் தர பல மென்பொருட்கள் இணையத்தில் காணப்படுகின்றன. நாம் இப்போ அதில் ஒருவகையான HTTRACK  எனும் மென்பொருளின் பயன்பற்றிப் பார்ப்போம்.
இம்மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக கீழ் உள்ள இணைப்பின்மூலம் பதிவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்




இப்போ நிறுவுகை முடிவடைந்ததும் அதனை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.


இதில் “NEXT” என்பதைக் கொடுங்கள். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “New Project Name” என்பதில் உங்களுக்கு விரும்பிய பெயர் ஒன்றினைக் கொடுங்கள். “Base Path”  என்பதில் நீங்கள் எங்கு சேமிக்கப் போறீர்களோ அவ்விடத்திற்குரிய பாதையைக்[Path] காட்டிவிடவும். பின்னர் “NEXT” என்பதைக் கொடுக்கவும். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “ Add URL ” என்பதை கிளிக் பண்ணவும். இப்போ கீ காட்டியவாறு விண்டோ தோன்றும். இதில் “ URL “ என்பதில் உங்களுக்கு வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை கொடுத்து “ OK “ என்பதைக் கொடுக்கவும்.


பின்னர் அடுத்துவரும் விண்டோவில் “ NEXT ” என்பதைக் கொடுத்து இறுதியில் “ Finished ” என்பதைக் கொடுக்கவும்.



இப்போ கீழ் உள்ளவாறு இணையத்தளத்தின் அனைத்தும் பதியப்படும். முடிவடைய சற்று நேரமெடுக்கும். இவ்வேளையில் நீங்கள் இணையத்தில் வேறேதும் பற்றி அலசவேண்டியதுதான். பின்னர் செய்கை முடிவுற்றதும் “ Finished ” என்பதைக் கொடுத்து வெளியேறுக.

பின்னர் இணைய இணைப்பு இல்லாதவேளையில் சேமித்து வைத்த Folder இனுள் சென்று “ .html “  இல் உள்ள  File Open செய்து படிக்கவேண்டியதுதான்.
இணையத் தொடர்பு உள்ளவேளை இணையத்தளம் ஒன்றினுள் அலசுவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இது வீடுகளில் இணையவசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.




TQ: Alasalgal1000

Wednesday, January 25, 2012

அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

 எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம்.  இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான்.  ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும்.  

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது.  அதன் பெயர் fetch.io  இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி


101 இணையதளங்களின் தொகுப்பு அனைவருக்கும்


Thursday, December 8, 2011

வந்தேமாதரத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த சிறந்த 10 இடுகை


10) பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது எப்படி?
நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி மாற்றுவது என்று தெரிந்து கொள்ளலாம் என்று இந்த பதிவை படித்திருப்பார்கள். அதிக வாசகர்களை கவர்ந்த இடுகைகளில் 10 வது இடத்தில் உள்ளது.

Saturday, July 23, 2011

அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க

கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.

கணினியில் USB Drive களை முடக்குவது எப்படி?

கணினியில் USB Drive களை முடக்க வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்படும் என்பதனை பார்ப்போம். கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

கணக்குகளை எளிதாக்கும் Command Line Calculator

நான் கணிதத்தில் பெரிய அறிவு பெற்றவன் இல்லை. நாள்தொறும் கணக்குகளை உபயோகபடுத்தும் பொறியாளரும் அல்ல. பள்ளி நாட்களில் Sin, Cos, Vector, Calculus போன்றவை பெயரளவில் நியாபகம் இருக்கிறது.

விண்டோஸ் கணினியில் வரும் கால்குலேட்டர் கூட்டல், கழித்தல் , பெருக்கல் மற்றும் வகுத்தல் முதலான அடிப்படை கணித தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கும். கணித துறையில் ஆர்வம் உள்ளவர்களும், மாணவர்களும் தனது மேம்பட்ட கணித தேவைக்காக உபயோகிக்க ஏதுவான ஒரு கால்குலேட்டர் மென்பொருளை இணையத்தில் கண்டேன். கணித தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வண்ணம் அந்த மென்பொருள் அமைந்து உள்ளது.

பயர்பாக்ஸை அழகுபடுத்த இலவச தீம்கள்

பொதுவாகவே அழகுபடுத்துவது என்பது ஒவ்வொருவருடைய ரசனையை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு அழகாக தெரிவது மற்றவருக்கு அழகற்றதாக இருக்கலாம். கணினி துறையை பொறுத்தவரை விண்டோஸ் தீம் (Theme) , இணையதளங்களில் வெவ்வேறு விதமான வடிவமைப்புகள், பிளாக்குகளை பொறுத்தவரை டெம்ப்ளேட்டுகள் என்று டிசைன்நுக்கென்று தனிக்கவனம் செலுத்து கின்றனர். நம்க்கு விருப்பமான டிசைனை தேர்ந்தெடுக்கும் போது அதன் பின்னணியில் வேலை பார்ப்பது மகிழ்வை தரும்.

படங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் !

       இப்பொழுது பெரும்பாலும் புகைப்படங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கிறோம் .அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கும்(5 MB வரை ).இவற்றை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஈ மெயில்  மூலமாக அனுப்புவது சற்று சிரமமாக இருக்கும் .மேலும் பதிவிடும் சமயங்களில் முக நூலில் பகிர்தலிலும் பெரிய அளவுடைய புகைப்படங்கள் சிரமத்தை ஏற்படுத்தும்.

Saturday, June 4, 2011

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க  சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று  பார்க்கலாம் வாருங்கள்.

நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனி வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல் அனிமேசனில் அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூல்ம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.got-free-ecards.com/
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணினியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து  எல்லாம் சரியாகதெர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின்  பெயர் மற்றும் இமெயில் முகவரி , மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இனி வாழ்த்துச்செய்தியை வெறுமையாக அனுப்பாமல் அனிமேசனுடன் அனுப்ப விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்
புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம்
யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை
உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .

சாதாரண புல் முதல் அதிபர் ஓபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki. அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
என்ன தகவல் வேண்டும் அதைப்பற்றிய தகவல்களை உடனுக்கூடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான் Qwiki.
இணையதள முகவரி : http://www.qwiki.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Enter Topic என்ற கட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Enter பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ள தலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கி பார்க்கலாம். இந்த Qwiki -விக்கியில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளது. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடன் பார்க்கலாம். விக்கி பயன்படுத்தும் நபர்களுக்கும் அரிய பல தகவல்களை வீடியோவுடன் பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.
அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்
எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.
Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்

1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம்.

தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால்  கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று  என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.fontsquirrel.com
இத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம்.  குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவிரக்கலாம்.
ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.
ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.
புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.

தினமும் உலக அளவில் பிரபலமான முதல் 12 வீடியோக்களை காட்டும் தளம்.

சிறந்த வீடியோக்களை இனி தேடிக் கண்டுபிடித்து பார்க்க வேண்டாம் ,தினமும் உலக அளவில் மிகவும் பிரபலமான 12 வீடியோக்களை துறை வாரியாக நமக்கு காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சிறந்த வீடியோக்களை இனி ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம், யூடியுப்-ல் இருந்து அனைவராலும் மிகவும் பார்க்கப்பட்ட  வீடியோக்களை துறை வாரியாக பிரித்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.12vid.com
சிறந்த வீடியோக்கள் அனைத்தையும் துறை வாரியாக பட்டியலிட்டு நமக்கு காட்டுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Cool Ads , Fails Funny Videos , Gaming & Tech Inspiring, Movie Trailers , Music Videos , OMG , Pets & Animals , Sports , என்று அனைத்து துறைகளிலும் முதல் சிறந்த 12 வீடியோக்களை 12 பக்கங்கள் வீதம் நமக்கு காட்டுகிறது. யூடியுப் தளத்தில் அதிக வாசகர்கள் பார்த்த வீடியோக்களை வரிசைப்படுத்தி கொடுக்கும் வேலையை இத்தளம் செய்கிறது. உதாரணமாக Movie Trailers என்பதை சொடுக்கி தற்போது வெளிவர  இருக்கும் படத்தின் டிரைலரையும் எளிதாக பார்க்கலாம். Pets and Animals என்பதை சொடுக்கி செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவையும் பார்க்கலாம். இதைத்தவிர அன்றைய தினத்தில் யூடியுப் வாசகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 12 வீடியோக்களை இத்தளத்தின் முகப்பு பக்கத்தில் தினமும் பார்க்கலாம்.
டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.

தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடலாம்

ஒரு நாட்டில் ஏதோ ஒரு காரணத்திற்காக சில இணையத்தளங்களை பார்வையிட முடியாதபடி தடை செய்யப்பட்டிருக்கும். அவ்வாறான தளங்களை பார்வையிட proxy வகை தளங்களை பலர் நாடுவது உண்டு.அவ்வாறு நாடுபவர்களுக்கு இதோ 90 தளங்கள் உதவ காத்திருக்கின்றன. அத்தளங்களை பார்வையிட இங்கு செல்லுங்கள்.

மொபைல் போனின் டிஸ்ப்ளேயில் உங்கள் பெயர் அழகான வடிவில் ஸ்க்ரீன்சேவர் போல வேண்டுமா?




இது போல உங்கள் மொபைல் போனுக்கும் வேண்டுமா? அதற்கு இங்கே கிளிக் http://reddodo.com/செய்யவும்.

Friday, April 22, 2011

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்




இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.

ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்


சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.

யூடியூப் வீடியோக்களை HD வடிவில் வேகமாக டவுண்லோட் செய்வது எப்படி?



யூடியூப்பில் வீடியோக்களை HD வடிவில் அதிக தரத்தில் பார்வையிடுவதற்கு option இருக்கிறது எனினும் ,
அது உண்மையான ஹெச் டி யின் அனுபவத்தை தராது.
Related Posts Plugin for WordPress, Blogger...