10) பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது எப்படி?
நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி மாற்றுவது என்று தெரிந்து கொள்ளலாம் என்று இந்த பதிவை படித்திருப்பார்கள். அதிக வாசகர்களை கவர்ந்த இடுகைகளில் 10 வது இடத்தில் உள்ளது.
9) Youtube- ஐ வீழ்த்த யாகூவின் புதிய வீடியோ தளம்- Yahoo Video
நாம் எப்பொழுது வீடியோக்களுக்கு அடிமை தான். சராசரியாக ஒரு இந்தியர் மாதம் 58 வீடியோக்களை யூடியுப் தளத்தில் மட்டும் பார்க்கிறாராம். பிரபல நிறுவனமான யாஹூ புதியதாக உருவாக்கியுள்ள வீடியோ தளத்தை பற்றிய பதிவு இது.
8) மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்களாக காட்டும் தளம்
நமது உடல் உறுப்புகள் இயந்திரம் போல எப்பொழுதும் இயங்கி கொண்டே உள்ளது. நமது உள் உடல் உறுப்புகள் எப்படி இயங்குகிறது என அனிமேசன்களாக காட்டும் பதிவு இது.
7) இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011
உலகை இப்பொழுது ஆண்டு கொண்டு இருப்பது பணம் ஒன்று தான். பணம் தான் ஒருவனின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. அதில் இணையதளம் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் 10 இணைய தளங்கள் பற்றிய பதிவு இது.
6)இந்தியர்களுக்கு கூகுளின் அதிரடி சலுகை
கூகுள் நிறுவனம் இந்திய சிறு குறு தொழில் நிறுவனங்களும் இணைய தளங்கள் உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய சிறிய தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வெப்சைட் உருவாக்கி கொள்ளும் சலுகையை அளித்தது. இதில் உள்நோக்கம் இருந்தாலும் இந்த சலுகையின் மூலம் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இது.
5) ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி
இந்திய அரசு அறிவித்துள்ள ஆதர் அடையாள அட்டை பெற மணிக்கணக்கில் வரிசையில் காத்து இருக்காமல் ஆன்லைனில் முன் அனுமதி வாங்கி வரிசையில் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் அடையாள அட்டையை பதிவு செய்வது பற்றிய பதிவு இது.
4)குறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எங்கோ சென்று கொண்டுள்ளது. ஒரு அறை முழுவதும் இருந்த கணினி சுருங்கி சுருங்கி ஒரு கையடக்க பொருளில் வந்துவிட்டது. இந்தியாவில் வெளிவரப்போகும் குறைந்த விலை ஆகாஷ் கணங்களை முன்பதிவு செய்வது எவ்வாறு என சொல்லும் பதிவு இது. மற்றும் இந்த பதிவில் இந்த கணினியை பற்றிய பல கூடுதல் தகவல்களும் உள்ளது.
3)இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011
உலகை இப்பொழுது ஆண்டு கொண்டு இருப்பது பணம் ஒன்று தான். பணம் தான் ஒருவனின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. அதில் ஒன்று வலைப்பூ தொடங்கி அதன் மூலம் சம்பாதிப்பது. இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த 10 வலைப்பூவின் பட்டியல் மற்றும் அவை சம்பாதிக்கும் தொகை ஆகியவை இந்த பதிவில் உள்ளது.
2) 2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்
ஹாக்கர்கள் அதிகரித்து விட்ட நிலையில் தங்கள் கணக்குகளை பாதுகாப்பதில் அதிக கவனம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. ஆதலால் எவைகளை கடவுசொல்லாக வைக்க கூடாது என சொல்லும் பதிவு இது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த இடுகை தான். சினிமா என்றாலே எல்லோருக்கும் பிடிச்ச ஒன்று. அதிலும் சும்மாவே சினிமா காட்டுனா பிடிக்காமல் போயிடுமா என்ன.
No comments:
Post a Comment