Friday, October 22, 2010

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்



AddThis Social Bookmark Button
Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது.  இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத்து தகவல்களையும் காட்டும். அங்கிருந்து அவற்றை அழிக்க அல்லது மீண்டும் Scan செய்ய முடியும்.



தானகவே Update செய்துகொள்ளும் Avira சில நேரங்களில் நீங்களாகவும் செய்ய நேரிடுவது, மேலும் Full Scanning சற்று அதிக நேரம் எடுத்தல் போன்ற சில குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கும் சாதாரண கணணிப் பாவனையாளர்களுக்கும் முழுமையாக ஒரு சிறந்த அன்டிவைரஸ் மென்பொருளாகும்.
தரவிறக்கம் http://download.cnet.com/Avira-AntiVir-Personal-Free-Antivirus/3000-2239_4-10322935.html
Ccleaner

கணனியின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் சாதரணமாக கணணியில் உருவாகும் தேவையற்ற File கள் Browsing History, காலாவதியான Registry தகவல்கள் போன்றவற்றை சேர விடமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான விடயம். அதற்கு உதவிசெய்யவே  Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணணியை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் Ccleaner ஒரு இலவச செறிவு குறைந்த மென்பொருளாகும்.

ஏனைய மென்பொருட்களை போலவே நிறுவ கூடிய இது Auto Update வசதியை கொண்டது. இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையான அல்லது கணனிக்கு தேவையான Systems File களை அழித்து விடும் அபாயம் உள்ளது. அதனாலேயே நிறுவிய பின் Scan செய்வதற்கான தெரிவுகளில் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை.



முதலில் Cleaner பகுதியில் Analysis பட்டனை அழுத்தி Scan செய்தபின் Run Cleaner ஐ கிளிக் செய்யுங்கள். தேவையற்ற File கள் Browsing History, போன்றவை அழிக்கப்படும் இவற்றை மீள பெற முடியாது. ஆனாலும் நீங்கள் Scan தெரிவுகளில் மாற்றங்கள் செய்யாவிடின் பயப்படத்தேவையில்லை.  காலாவதியான Registry தகவல்கள் அழிக்க Registry தெரிவு செய்து Scan Issues செய்து பின் Fix selected issues கிளிக் செய்ததும் Registry entry Backup செய்ய வேண்டுமென அறிவுறுத்தும். அவ்வாறு Backup ஐ பதிவு செய்ததும்.  காலாவதியான Registry தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். இது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருளாகும்.


தரவிறக்கம் http://www.filehippo.com/download/file/9a888115b46999306ccbe9969700d286c0055e84866c44b8e6e6023d1bf06d9

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...