விநாயகர்
விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள். நாயகர் - தலைவர், விநாயகர் - மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவன். " ஓம் அநீஸ்வராய நமஹ " என்னும் மந்திரத்திற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவன் என்று பொருள். ஸ்ரீ ஆதிசங்கரர் தான் அருளிய கனேச பஞ்சரத்தினத்தில் " அநாயகைக நாயகம் " என்று கனபதியைப் போற்றூகிறார். அநாயக - ஏக -... நாயகம், அதாவது தனக்கு மேல் ஒரு நாயகர் இல்லாமல் ஏகநாயகராக இருப்பவர்.
விக்னங்களைப் ( இடையூறுகளை ) போக்குவதால் விக்னேஸ்வரர் எனவும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி எனவும் இவர் வணங்கப்படுகிறார்.
விநாயகருடைய வடிவம் விந்தையானது. விநாயகருக்கு இடையின் கீழ் மனித உடல், இடைக்குமேல் கழுத்துவரை தேவ உடல், மேலே விலங்கின் தலை ( யானைத் தலை ) பூதப் பெரு வயிறு. ஒரு பக்கம் கொம்பு - ஆண் தன்மை, மற்றொரு பக்கம் பெண் தன்மை. அஃறினை, உயர்தினை, அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கின் அவர் தேவராய், மனிதராய், பூதராய், விலங்காய், ஆணாய், பெணாய், எல்லாமைத் திகழ்கிறார் என புலனாகும்.
No comments:
Post a Comment