ஓடு ஓடு இந்த நாசமா போன உலகத்துல நாம இருக்கா வேணாம் நம்ம கிரகதுக்கே போயிடலாம்.
Friday, October 22, 2010
யோகா செய்வது எப்படி?
வரலாறு
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: - உட்காசனம்
- பத்மாசனம்
- வீராசனம்
- யோகமுத்ரா
- உத்தீதபத்மாசனம்
- சானுசீரானம்
- பஸ்திமோத்தாசனம்
- உத்தானபாத ஆசனம்
- நவாசனம்
- விபரீதகரணி
- சர்வாங்காசனம்
- ஹலாசனம்
- மச்சாசனம்
- சப்தவசீராசனம்
- புசங்காசனம்
- சலபாசனம்
- தணுராசனம்
- வச்சிராசனம்
- மயூராசனம்
- உசர்ட்டாசனம்
- மகாமுத்ரா
- அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
- சிரசாசனம்
- சவாசனம்
- மயுராசனம்
- உசர்ட்டாசனம்
- அர்த்த மத்ச்யோந்திராசனம்
- அர்த்த சிரசானம்
- சிரசாசனம்
- நின்ற பாத ஆசனம்
- பிறையாசனம்
- பாதாசுத்தானம்
- திருகோணசனம்
- கோணாசனம்
- உட்டியானா
- நெளலி
- சக்கராசனம்
- சவாசனம்/சாந்தியாசனம்
- பவனமுத்தாசனம்
- கந்தபீடாசனம்
- கோரசா ஆசனம்
- மிருகாசனம்
- நடராசா ஆசனம்
- ஊர்த்துவ பதமாசனம்
- பிரானாசனம்
- சம்பூரண சபீடாசனம்
- சதுரகோனோசனம்
- ஆகர்சன தனூராசனம்
- ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
- உருக்காசனம்
- ஏக அத்த புசங்காசனம்
- யோகா நித்திரை
- சாக்கோராசனம்
- கலா பைரப ஆசனம்
- அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
- கவையாசனம்
- பூர்ண நவாசனம்
- முக்த அகத்த சிரசாசனம்
- ஏகபாத சிரசாசனம்
- இன்றைய கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
- மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.
- ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
- ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
- நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
- உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
பத்மாசனம்
நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.
தணுராசனம்
பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.
சிரசாசனம்
தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்: தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் :
இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.
விபரீதகரணி
நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.
புஜங்காசனம் தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது.
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.
பச்சிமோத்தாசனம்
இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.
நம் பிளாக்கை மேலும் அழகாக்க 100+ அழகான கடிகாரங்கள்
இந்த விட்ஜெட்டை பெற பதிவின் முடிவில் கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்து அந்த தளம் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
- இதில் உங்களுக்கு 149 வடிவில் கடிகாரங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த கடிகாரத்திற்கு கீழே உள்ள HTML CODE என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
- இது போல் விண்டோ வந்தவுடன் அதில் உள்ள Html code காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Design- Add a gadget - Html/JavaScript - சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்கவேண்டும்.
- இப்பொழுது கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய தளத்தில் நீங்கள் விரும்பிய கடிகாரம் வந்துவிடும்.
- இதில் Time செட் பண்ண வேண்டியதில்லை உங்கள் கணினியில் இருக்கும் நேரத்தை தானாகவே எடுத்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.
பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவரின் விவரங்கள் அறிய
இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் 90% மேல் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.
- இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.
- இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.
- நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் Greese Monkey Add On நிறுவியிருக்க வேண்டும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends என்ற லிங்க் இருக்கும்.
- இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும்.
- இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள்.
- நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம்.
- இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.
உங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா, இல்லையா?
|
என்னடா திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டு புட்டானே இன்னு பார்க்கறீங்களா. பக்கத்துக்கு தெருவில் மழை பெய்தால் கூட நமக்கு தெரியாது நம்ம நகரில் மழை பொழிகிறதான்னு கேட்கிறாரே. கொஞ்சம் இருங்க சார் நியுஸ் பார்த்துட்டு வந்து சொல்றேன்னு கிளம்பிடாதிங்க இனி அந்த கவலையை விடுங்க அதை அறிய ஒரு தளம் உள்ளது.
இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்களுடைய நகரத்தின் பெயரை குறிப்பிடவும்.
- அடுத்து உங்கள் கீபோர்டில் ENTER கீயை அழுத்துங்கள்.
- உங்கள் விண்டோ லோடு ஆகி கீழே உள்ளதை போல முடிவு வரும்.
- இது போல் நமக்கு முடிவு வரும்.
- இந்து யாகூ வெதர் அடிப்படையில் இயங்குகிறது.
- இது போல் நீங்கள் உங்களுக்கு தேவையான நகரத்தின் பெயரை சரியாக கொடுத்து மழை பொழிகிறதா இல்லையா என கண்டு கொள்ளலாம்.
- ஒருவேளை நீங்கள் சரியாக பெயரை கொடுத்தும் இதில் கீழே உள்ளதை போல வந்தால்
- உங்கள் நகரம் இந்த லிஸ்டில் சேர்க்க படவில்லை என்று பொருளாகும்.
- உடனே உங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா இல்லையா என பார்க்க ஆவலாக இருக்கீங்களா இதோ இந்த லிங்கில் Is it Raining in your City? செல்லுங்கள்
உங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர
பிளாக் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு விரும்பிய படத்தை FAVICON களாக அவர்களின் பிளாக்குகளில் வைத்து உள்ளனர். (அப்படி எந்த படத்தையும் வைக்காதவர்களுக்கு பிளாக்கரின்
நிலையான படமான B என்ற படம் மட்டுமே தெரியும் அது பார்ப்பதற்கு அழகற்று இருக்கும்.) ஆனால் நாம் ஏதேனும் படத்தை மட்டுமே வைக்கமுடியும். நம் தளத்தின் பெயரை படமாக மாற்றி வைத்தாலும் ஓரிரண்டு எழுத்துக்களை மட்டுமே சேர்க்க முடியும். முழு பெயரையும் வைக்க முடியாது. எப்படி நம் தளத்தில் ANIMATED SCROLING TEXT பெவிகானாக மாற்றுவது என்று பார்ப்போம்.
நிலையான படமான B என்ற படம் மட்டுமே தெரியும் அது பார்ப்பதற்கு அழகற்று இருக்கும்.) ஆனால் நாம் ஏதேனும் படத்தை மட்டுமே வைக்கமுடியும். நம் தளத்தின் பெயரை படமாக மாற்றி வைத்தாலும் ஓரிரண்டு எழுத்துக்களை மட்டுமே சேர்க்க முடியும். முழு பெயரையும் வைக்க முடியாது. எப்படி நம் தளத்தில் ANIMATED SCROLING TEXT பெவிகானாக மாற்றுவது என்று பார்ப்போம்.
- கீழே உள்ள படத்தை பாருங்கள் நான் பெவிகானாக மாற்றிய படம் கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
- இது போல் நமக்கு தேவையான படத்தையும், நம் தளத்தின் பெயரையும் கொடுத்து இதுபோல உருவாக்கி நம் பிளாக்கில் fevicon ஆக மாற்றி கொள்ளலாம்.
- இதற்கு இந்த லிங்கில் Favicon Generator இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- முதலில் உங்கள் படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்துள்ள கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் எழுத்துக்களை கொடுக்கவும்.
- முடிவில் Generate Favicon என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
- இதில் நான் வட்டமிட்ட இடத்தில் உள்ள animated favicon.gif என்ற பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு Photobucket, flickr போன்ற Image host தளங்களுக்கு சென்று உங்கள் படத்திற்கான URL பெற்று கொள்ளவும்.
- உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Design- Edit Html பகுதிக்கு சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும்.
- கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு <head> கீழே பேஸ்ட் செய்யவும்.
<link href='YOUR ANIMATED FAVICON URL' rel='shortcut icon'/>
- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.
- இது போல் சரியான இடத்தில் கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.
- அவ்வளவு தான் உங்கள் Animated Scrollin Text Favicon உங்கள் பிளாக்கில் சேர்ந்து விட்டது.
உங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
வீட்டு விசேஷங்களிலும், சுற்றுலா செல்லும் போதும் நாம் படம் எடுத்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. போட்டோக்கள் எடுத்து கொள்வதன் மூலம் நாம் அந்த பழைய நினைவுகளை மறக்காமல் இருப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நாம் சிறுவயது போட்டோக்கள் நம் பள்ளிவயது கல்லூரியில் எடுத்தது இப்படி பல போட்டோக்கள் நம்மிடம் இருக்கும்.
இவை அனைத்தையும் நாம் ஒன்று சேர்த்து DVD ஆல்பமாக தயாரித்தால் பார்ப்பதற்கே அழகாக இருக்குமல்லவா. அதை சுலபமாக செய்யவே நமக்கு ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
- இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் நீங்கள் உபயோக நிலையில் உள்ள ஏதேனும் ஈமெயில் ஐடி கொடுத்து அருகில் உள்ள Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- ஏதேனும் அப்டேட் வெர்சன் வந்தால் தெரிவிக்கவே இந்த ஈமெயில் ஐடியை கேட்கின்றனர்.
- உங்கள் பைலை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- நீங்கள் DVD யாக மாற்ற விரும்பும் போட்டோக்களை ஒன்றாக ஒரு போல்டரில் போட்டு டெஸ்க்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- இதில் மேல் பகுதியில் உங்கள் போட்டோக்கள் உள்ள போல்டரை தேர்வு செய்தவுடன் கீழே அந்த படங்கள் வரிசையாக வந்து விடும் இதில் ரைட் க்ளிக் செய்து Add all என்ற பட்டனை அழுத்துங்கள்.
- உங்கள் போட்டோக்கள் பக்கத்தில் மேலே உள்ள காலி கட்டத்தில் வரிசையாக வந்திருக்கும்.
- இதில் ஏதாவது படம் தலைகீழாக இருந்தால் அதை நேராக திருப்பி கொள்ளுங்கள்
- அடுத்து நீங்கள் அருகில் உள்ள AUDIOS என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து Audios என்பதை தேர்வு செய்து போட்டோக்களை தேர்வு செய்த முறையில் ஆடியோவையும் தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்து உங்கள் விண்டோவில் கீழே பார்க்கவும்.
- கீழே உற்று நோக்கினால் உங்கள் போட்டோக்கள் வரும் நேரமும் ஆடியோ பாடும் நேரமும் தெரியும் இவை இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தால் மேலே உள்ள LOOP என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும். இது இரண்டையும் சரி செய்து கொள்ளும்.
- மேலே படத்தில் கூறியுள்ளதை போல வரிசையாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து முடிவில் Output என்ற கடைசி படியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- இதில் உங்கள் DVD ஆல்பம் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொண்டு Output என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் DVD ஆல்பம் தயாராக ஆரம்பிக்கும்.
- பொறுமையாக இருக்கவும் உங்கள் போட்டோக்களின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் பிடிக்கும்.
- முடிவில் உங்களுக்கு Congratulations your DVD Album ready என்ற செய்தி வரும் வரை பொறுமையாக இருக்கவும்.
உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க
இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.
கீழே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
- என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.
- அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும்.
- இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
- அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.
- மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
பிளாக்கில் உபயோகிக்கும் முறை
- இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு
- Design- Add a Gadget - Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
<a href="mailto:YOUR EMAIL ID"><img src="EMAIL LOGO URL" /></a>
- YOUR EMAIL ID - உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
- EMAIL LOGO URL - என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும்.
- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
- முடிவில் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த லோகோவுடன் உங்கள் தளத்தில் வந்திருக்கும்.
- உங்கள் வாசகர்களும் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க
நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.பயன்கள்:
- உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.
- இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
- நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
- வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
- வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
- வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
- இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
- இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
- இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
- அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
- அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.
பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவ
Trailer: குழந்தைகள் கணிணியில் என்னென்ன செய்கிறார்கள் என்று அவர்களது நடவடிக்கைகளை கண்டறிவது பற்றி தெரிந்துகொள்வது எப்படி ? அவற்றை நமது email மூலம் தெரிந்துகொள்ளலாம் அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம் ...
கணிணியை பாதுகாக்கும் முறை பற்றி பார்த்தாகிவிட்டது கணினிக்கு வைரஸ் வர முதன்மை & பெரும்பான்மை காரணம் இணையதளம் மட்டுமே (இறுதியில் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் புரியும்). அடுத்து USB port . இணையதளத்தில் கணிணியை பாதுகாப்பாக பயன்படுத்தினாலே பெரும்பாலான பிரச்சினைகளை தடுக்கலாம் . அதற்க்கான முயற்சி தான் இது . எனக்கு தெரிந்த சில தகவல்களை கொடுத்துள்ளேன் .
1.முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus /Firewall உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள்.
2.விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux / unix OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம்.
3.பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது.
4.கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய வைரஸ் காரணம் இதற்கும் பொருந்தும்.
5.இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறுசெல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள்.
6.கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை.
7.POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் popup disable option தேர்வுசெய்துவிடுங்கள் .
7.POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் popup disable option தேர்வுசெய்துவிடுங்கள் .
8.புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.
10.இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆன ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் .(இதைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம்)
இவற்றை பின்பற்றி இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் .
அப்படியே கீழே உள்ள படத்தை பாருங்கள் சீனா ,US, ரஷ்ய நாடுகள் பாதுகாப்பற்ற பல இணையதளங்களை கொண்டிருக்கும் தகவல் உள்ளது .
Subscribe to:
Posts (Atom)