கூகுளின் டிரான்சிலேட் பற்றி அறிந்து கொண்டதும் வியப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் தவறவிட்டமையை எண்ணி வருத்தம் கொண்டேன். உங்களுக்கு புரியாமல் இருக்கும் மொழியை காப்பி செய்திடுங்கள். பின்பு translate.google.comக்கு சென்று அங்கு, காலியாக இருக்கும் பெட்டியில் பேஸ்ட் செய்திடுங்கள். உடனே அது எந்த மொழியென்றும் அந்த மொழிக்கான ஆங்கில அர்த்தத்தினையும் அருகிலேயே காணலாம்.
அது மட்டுமல்லாமல், ரஷ்யன், ஐப்பான், சீனா என அந்தந்த நாடுகளின் மொழிகளால் எழுதப்பட்ட வலைப்பூவையும் ஆங்கிலத்தில் படிக்க முடியும். அதற்கு அந்த வலைதளத்தின் முகவரியை காப்பி செய்து translate.google.comக்கு சென்று உள்ளீடு செய்து translate என்ற பட்டனை அழுத்த வேண்டும் அவ்வளவுதான். இனி எல்லா மொழியினையும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
நம் வலைப்பூவினை பார்த்ததும் நிறைய நண்பர்கள் கேட்கும் கேள்வி எப்படி தமிழில் எழுதுவது என்பதுதான். தமிழ் தட்டச்சுக்கென இருக்கும் மென்பொருள்களை சிபாசு செய்தால், அதனை பயன்படுத்துவதற்குள் அவர்கள் தமிழையே வெறுத்துவிடுகின்றனர். தமிழ் தட்டச்சு பழகுவது மிகவும் சிரமாக இருக்கிறது என்று கூறி மீண்டும் ஆங்கிலத்திற்கே சென்று விடுகின்றனர்.
இன்று கைப்பேசியில் கூட தமிழ் வந்துவிட்டாலும் அதனை பயன்படுத்துபவர்கள் வெகு குறைவு. இதற்கெல்லாம் காரணம், எல்லோரும் தங்கிலிஸ் என்ற புதுமொழியில் பழகிவிட்டனர். அம்மா என்பதை amma என்று எழுதியே பழக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வழியிலேயே தமிழில் எழுத google.com/transliteratel உதவி செய்கிறது. இங்கு சென்று தங்கிலிஸில் ஆங்கிலத்தினை தட்டச்சு செய்தால், தமிழ் மொழி கிடைத்துவிடும். படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளையும் தட்டச்சு செய்ய இயலும் என்றாலும் அந்தந்த மொழிகளின் அடிப்படை அறிவும் தேவை.
கூகுள் நிறுவனம் இந்த எளிமையான தமிழ் எழுதியை மின்னஞ்சல், ஆர்குட் என்று எல்லாவற்றிலும் புகுத்திவிட்டது உங்களுக்கு தெரி்ந்திருக்கும். மென்பொருளாக தரவிரக்கம் செய்யும் வசதியையும் இப்போது கூகுள் தந்திருக்கிறது.
அதற்கு, இங்கு சென்று கீழிருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, தமிழினை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்து டவுன்லோட் பட்டனை தட்டி இன்ஸ்டால் செய்தால் போதும். இனி எங்கும் எதிலும் எளிதான தமிழ் தான்.
No comments:
Post a Comment