Wednesday, November 17, 2010

சுலபமாக வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.

  • இந்த வேலையை நமக்கு சுலமாக செய்ய இந்த தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த லிங்கில் Audio from Vedio க்ளிக் செய்யவும். கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே உள்ள கட்டத்தில் உங்களின் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • I accept க்ளிக் செய்து அடுத்துள்ள Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • சிறிது நேரம் காத்திருக்கவும்.உங்களுடைய வீடியோ கன்வெர்ட் ஆகி mp3 பைலாக உங்கள் கணினியில் சேமிக்க படும். 
  • மேற்கூறிய முறையில் இணையத்தில் உள்ள வீடியோக்களில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்கும் முறை.
  •  ஆனால் நம் கணினியில் உள்ள வீடியோவில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இந்த தளத்தில் சென்று அருகில் உள்ள Convert by Upload என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்திவிடவும்.
  • மேலே படத்தில் உள்ளது போல் நீங்கள் செய்து உங்கள் கணினியில் சேமித்திருக்கும் வீடியோவில் இருந்த ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...