Wednesday, November 17, 2010

வைரஸ் தாக்காமல் இருக்க , கணிணியின் வேகத்தை அதிகப்படுத்த எளிய ஒரே வழி ..



கணிணியில் Memory space , Ram போன்றவை அதிகமாக இருந்தாலும் வேகம் குறைய இரண்டே காரணங்கள் தான்

. வைரஸ் பாதிப்பால் Software / Hardware பாதிக்கப்படுவது இவற்றை விட முக்கிய காரணம்

.Temporary files, history, cookies, download history, form history ,index.dat போன்ற File கள் மற்றும் Recyclebin .

                  நாம் இன்டர்நெட் ல் வெவ்வேறு வலை பக்கங்களுக்கு  செல்லும்போது அவற்றில் இருந்து சில தகவல்களை file ஆக சேகரித்து  இவற்றை எல்லாம் ஒரு Folder ல் வைத்துக்கொள்ளும் , மீண்டும் அதே பக்கத்திற்கு செல்லும்போது இந்த File கள் மூலம் விரைவாக அந்த பக்கங்களை நமக்கு காட்டும் .

             இதனுடன் நாம் செய்த Download போன்றவற்றை இவ்வாறு வைத்துக்கொள்ளும்  இன்னும் Multimedia Web sites செல்லும்போது அதிக அளவு தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்கின்றன .
ஒரு வாரத்தில்  300Mb அளவிற்கு இந்த file வந்துவிடுகிறது என்று வைத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் 1GB நெருங்கிவிடும் . இதனால் கணிணி வேகம் குறைய ஆரம்பிக்கும்
இந்த file களை Delete செய்ய Temporary Internet Files சென்று அழிக்கவேண்டும்.
                 சில வைரஸ் பரப்பும் தளங்கள் நாம் சென்றுவிடும்போது Temporary Files உடன் வைரஸ் வந்துவிடும் வாய்ப்பும் உண்டு .உதாரணமாக

BloodhoundV2 Trojan Horse இந்த வைரஸ் temporary Internet Files வழியே வந்து கணினியை பாதிக்கும் அபாயகரமான வைரஸ் இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள Click Here



Recyclebin: நமக்கு வேண்டாத தகவல்களை பெரும்பாலும் Recyclebin அனுப்பிவிடுவோம் . ஆனால் அந்த தகவல் Recycle bin ல் இருந்தாலும் memory space குறைவது  இல்லை . இதற்க்கு Shift + Delete கொடுத்தல் முற்றிலும் நீக்கி Memory space அதிகபடுத்தலாம் .

       மேற்கண்ட அனைத்தையும் தினமும் சென்று அவற்றை Delete செய்வது கணினியின் வேகத்தை அதிகரிக்க சிறந்தவழி .இதற்காக ஒவ்வொரு போல்டெர்,Recyclebin  சென்று Delete செய்வது நேரத்தை வீணாக்கும் .

             சில வினாடிகளில் முடிக்க சிறந்தccleaner Software     3.16 Mb மட்டும் கொண்டது  இலவசமாக கிடைக்கிறது .இதனை Install    செய்து ஒரே Click ல் அனைத்து Temporary Files களை Delete செய்யலாம் . Password போன்ற முக்கிய தகவல்களை விட்டு விட்டு மற்றவற்றை மட்டும் அளிக்கும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு.

                       வேகத்தை அதிகரிப்பதைவிட மேலே கூரியதுபோன்ற temp வைரஸ்  இடமிருந்து பாதுகாக்க இதுபோன்ற cleaner பயன்படுத்துவது அவசியம்  ...


Download CCleaner

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...