Tuesday, March 22, 2011

பவர்பாய்ன்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற

நம்மில் பலர் மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை பயன்படுத்தி வருவோம். எளிய முறையில் தகவல்களை தொகுத்து அனிமேஷன் வேலைகளுடன் வழங்க உதவும். இதன் பயன்பாடுகள் விரிவானவை.

இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட் அல்லது பவர்பாய்ன்ட் வியுவர் தேவைப்படும். இவற்றை வீடியோ கோப்புகளாக மாற்றுவது பவர்பாயிண்ட்டில் இயலாத காரியம். வீடியோவாக மாற்றினால் கணினி, மொபைல் டிவிடி பிளேயர் என்று பயன்படுத்தி கொள்ளலாம்.

Leawo PowerPoint to Video Free. இந்த இலவச மென்பொருள் மூலம் மேற்சொன்ன வேலையை செய்ய வைக்க முடியும். பவர்பாய்ன்ட் கோப்புகளை ASF, WMV, 3PG, 3G2 வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை இந்த சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


PPT, POT, PPTX, PPS என்று அனைத்து விதமான பவர்பாயிண்ட் கோப்புகளையும் ஆதரிக்கும். அனைத்து அனிமேஷன்களும் வேலை செய்யும். வீடியோவிற்கு இசையை தனி டிராக்காக சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட வீடியோக்களை யுடியுப் மாதிரியான தளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...