Sunday, January 30, 2011

எல்லாமே அம்மாதான் !

திபராசக்தியின் திருவுருவ தோற்றமே  சகல தேவர்களின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறதே அதற்கான விளக்கம் என்ன? என்று சிலருக்கு தெரிவதில்லை
நமது இந்து மதத்தில் ஆறு பெரும் பிரிவுகள் உள்ளன என்று அனைவருக்கும் தெரியும்.



  •    கணபதியை முழுமுதற் கடவுளாக சொல்லும் காணபத்தியம்,
  •   முருகனை கொண்டாடும் கௌமாரம்,
  •   சூரியனை வழிபடும் சௌரம்
  •   சக்தியை தலைவியாக காட்டும் சாக்தம்,
  •   சிவனை சரணடையும சைவம்,
  •    திருமாலை வணங்கும் ஸ்ரீ வைஷ்ணவம் என்பன ஆறு பிவுகளாம்.

    இதில் நடுநாயமாக உள்ள சக்தி தேவி திருமாலுக்கு தங்கை.  சிவனுக்கோ மனைவி.  கணபதிக்கும், கந்தனுக்கும் ஈன்ற தாய்.



    சூரியனை உச்சி திலகமாக கொண்டவள் அன்னை ஆதி பராசக்தி எனவே தான் தாய் தெய்வ வழிபாடு எல்லா வழிபாட்டு முறைக்கும் ஆதாரமாக இருக்கிறது.

 சரி இதில் சகல தேவர்கள் எங்கே வருகிறார்கள்?  என்று நீங்கள் கேட்கலாம்.  இதோ அதற்கு பதில்.

    சிவபெருமானின் ஒளியிலிருந்து அன்னையின் முகம் உதயமானது. 

   அவளின் கார் கூந்தலோ எமதர்மனின் ஒளியிலிருந்து தோன்றியது.

   உலகெல்லாம் உள்ள ஜீவன்களுக்கு ஞானப் பால் கொடுக்கும் அவளது திருமுலைகள் விஷ்ணுவிடம் இருந்து வந்தது. 


    தாய் அவளின் கொடியிடை இந்திர ஒளியிலும்,

   முழங்கால்கள், தொடைகள் வருண ஒளியிலும்,

   பிருஷ்டம் நிறுதியின் ஒளியிலும்,

   கால்கள் பிரம்ம ஒளியிலும்,

    கை, கால் மற்றும் விரல்கள் சூரிய ஒளியிலும்,

   அஷ்டவசுகளின் ஒளி இருபது நககண்களாகவும்

   பிரகாபதியின் ஒளி பற்களாகவும்,

  அக்னி தேவனின் வெளிச்சம் மூன்று கண்களாகவும்,

    சந்தியா தேவதையின் ஒளி புருவங்களாகவும்,

   வாயு தேவனின் தேஜஸ் இரு செவிகளாகவும் அன்னை கொண்டுள்ளார்.

    அப்படிப்பட்ட தாய் அவள் ஒருத்தியை வணங்கினாலே சகல தேவதைகளையும் வணங்கிய இன்பம் கிடைக்கும் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...