Monday, January 10, 2011

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 நொடியில்

வேலைக்காக விண்ணப்பித்தாலும் சரி,ரேஷன் கார்ட்,பாஸ்போர்ட் என எதற்கு நீங்கள் அப்ளிகேஷன் போட்டாலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம் தேவைப்படும். இந்த ஆக்ஷன் டூல் மூலம் நீங்கள் நொடியில் 8 பாஸ்போர்ட் புகைப்படங்களை ரெடிசெய்து பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஸன் டூலை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் போட்டோஷாப் எந்த வெர்ஷன் வைத்திருந்தாலும் இந்த ஆக்ஷன் டூலை போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும்.இப்போது தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும். நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள நடிகையின் முகம் மட்டும் நமக்கு வேண்டும். எனவே புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் ஆக்ஷன் டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள.
 இப்போது உங்களுக்கு படத்தில ஒரு மூலையில் கிராப் டூல் போன்று சிறு கட்டம் இருக்கும். மற்ற இடங்கள் ஸேடோ செய்ததுபோல மறைந்திருக்கும். இப்போது அந்த கட்டத்தை கர்சரால் நகர்த்தி படத்தில் வேண்டிய அளவிற்கு கொண்டுவாருங்கள. சரியான போஸிஷன் வந்ததும் கீ -போர்டில் என்டர் தட்டவும. இப்போது உங்களுக்கு 8 படங்கள் கிடைத்திருக்கும். அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே இந்த குழந்தையின் படத்தை தேர்வு செய்துள்ளேன.
படத்தில் வேண்டிய அளவினை தேர்வு செய்தேன்.
என்டர் தட்டியவுடன வந்துள்ள படம் கீழே-
இதைப்போலவே சின்ன சின்ன ஆக்ஷன் டூல்கள் 100 க்கும் மேல் என்னிடம் உள்ளது.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.இந்த ஆக்ஷன் டூல்கள். போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்களுக்கும் போட்டோஷாப் கற்றுகொள்பவர்களுக்கும் அவசியமானது..அத்தியாவசமானது...எனவே தனியே இதனை சேமித்துவைத்துக்கொள்ளுங்கள.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...