Wednesday, November 17, 2010

Certificate of Participation

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்

தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.


TOP 300 Freeware software!

  • OFFICE
  • ARCHIVE MANAGEMENT
  • INTERNET
  • P2P
  • CHAT
  • SECURITY
  • NETWORK
  • SERVERS
  • AUDIO
  • VIDEO
  • IMAGE
  • 3D
  • DEVELOPERS
  • CD/DVD
  • CODECS
  • SYSTEM UTILITIES
  • UI ENHANCEMENTS
  • HARDWARE MONITORING
  • GAMES
  • EDUCATION
  • MISCELLANEOUS

என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.

உங்கள் இமெயில் ஐடியில் லோகோ(Logo) உருவாக்க

இணையத்தில் இமெயில் இலவசமாக கிடைக்கின்ற ஒரு வசதியாகும். யார் எத்தனை மெயில் ஐடி வேண்டும் என்றாலும் வைத்துகொள்ளலாம் அதற்கு எந்த அளவும் கிடையாது. பதிவர்களும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட ஈமெயில் ஐடி வைத்து இருப்பார்கள். நாம் நிறைய தளங்களில் பார்த்து இருப்போம் contact என்று போட்டு விட்டு அதற்கு அருகிலேயே அவர்கள் ஈமெயிலுடன் கூடிய படம் ஒன்று இருக்கும். அது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அதை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்ப்போம்.

கீழே சில மாதிரிகளை கொடுத்துள்ளேன் பார்க்கவும்.




  • என்ன அழகாக உள்ளதா இதை நம் தளத்தில் பொருத்தினால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.
  • அதற்கு இந்த லிங்கில் Email Logo செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் கட்டத்தில் உங்கள் மெயில் ஐடியை கொடுத்துவிடவும். 
  • இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு மெயில் சேவை தரும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்(இதில் சுமார் 25 மெயில் நிறுவனங்களின் பட்டியல் இருக்கும்).
  • அடுத்து கீழே உள்ள Generate என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் மெயில் ஐடியுடன் கூடிய லோகோ உங்களுக்கு வரும்.

  • மேலே படத்தில் காட்டியுள்ளதை போல் உங்கள் லோகோ மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து உங்கள் லோகோவை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் மெயிலுடன் கூடிய லோகோ உங்களுக்கு வந்துவிட்டது.
பிளாக்கில் உபயோகிக்கும் முறை 
  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு 
  • Design- Add a Gadget - Html/ JavaScript -சென்று கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
<a href="mailto:YOUR EMAIL ID"><img src="EMAIL LOGO URL" /></a>
  • YOUR EMAIL ID - உங்களுடைய இமெயில் ஐடியை கொடுக்கவும்.
  • EMAIL LOGO URL - என்ற இடத்தில் நீங்கள் உருவாக்கிய இமெயில் லோகோவின் URL கொடுக்கவும். 
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
  • முடிவில் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த லோகோவுடன் உங்கள் தளத்தில் வந்திருக்கும்.
  • உங்கள் வாசகர்களும் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை: 
  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து  Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.  
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம். 
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


தரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத்தின் Smush It

ஒரு படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்கிறார்கள் வல்லுனர்கள். நாம் எழுத்தில் புரிய வைக்க முடியாததை ஒரு படத்தை காட்டினால் மற்றவர்களுக்கு எளிதாக புரிந்து விடுகிறது அது மட்டுமல்லாது ஏதேனும் நிகழ்வை சுட்டிக்காட்டவோ அல்லது நம் பதிவை அழகாக மாற்றவோ நாம் பதிவிற்கு சம்பந்தமான சில படங்களை சேர்ப்போம்.
அப்படி நாம் படங்களை சேர்ப்பதனால் நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. மற்றும் நம் கணினியில் வைத்திருந்தாலும் படங்கள் அவற்றின் அளவிற்கு ஏற்ப நம் கணினியின் கொள்ளளவை நிரப்புகின்றன. ஆகையால் இந்த படங்களின் அளவை எப்படி குறைப்பது அதுவும் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல்.

பயன்கள்:
  • நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளாது.
  • நம் கணினியில் அதிக இடத்தை பெற்று கொள்ளாது.
  • நம் படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாது.
  • நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
  • ஒன்றிற்கு மேற்ப்பட்ட படங்களை ஒரே நேரத்தில் மாற்றும் வசதி.
  • இந்த தளம் சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  •  இதில் படத்தில் காட்டியிருப்பதை போல் UPLOADER என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் Select files to Smush என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் அளவை குறைக்க வேண்டிய அனைத்து படங்களையும் தேர்வு செய்து open கொடுக்கவும்.
  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து படங்களும் அளவு குறைந்து ஆனால் அதே தரத்தோடு வந்திருக்கும்.
  • உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் smush செய்த படங்கள் தெரியும்.
  • Savings என்ற இடத்தில் உங்கள் படத்தில் குறைக்க பட்ட அளவு காட்டப்படும்.
  • Sumsh செய்த படங்களை தரவிறக்க மேலே உள்ள Download Smushed Images என்ற பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரே Zip கோப்பில் உங்கள் கணினியில் சேமிக்க படும்.
  • நீங்கள் இணையத்தில் இருக்கும் படத்தையும் அளவை குறைக்கலாம். இதற்கு அருகில் உள்ள URL என்ற பட்டனை அழுத்தவும்.
  • இது போல் விண்டோ வந்ததும் உங்கள் படத்தின் URL இங்கு கொடுக்கவும்.
  • ஒவ்வொரு படத்தின் URL தனிதனி வரியில் கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள Smush pattanai அழுத்தினால் உங்கள் படம் தயாராகிவிட்டது.
  • நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Smush It செல்லவும்.

சுலபமாக வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.

  • இந்த வேலையை நமக்கு சுலமாக செய்ய இந்த தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த லிங்கில் Audio from Vedio க்ளிக் செய்யவும். கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே உள்ள கட்டத்தில் உங்களின் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • I accept க்ளிக் செய்து அடுத்துள்ள Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • சிறிது நேரம் காத்திருக்கவும்.உங்களுடைய வீடியோ கன்வெர்ட் ஆகி mp3 பைலாக உங்கள் கணினியில் சேமிக்க படும். 
  • மேற்கூறிய முறையில் இணையத்தில் உள்ள வீடியோக்களில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்கும் முறை.
  •  ஆனால் நம் கணினியில் உள்ள வீடியோவில் இருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இந்த தளத்தில் சென்று அருகில் உள்ள Convert by Upload என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்திவிடவும்.
  • மேலே படத்தில் உள்ளது போல் நீங்கள் செய்து உங்கள் கணினியில் சேமித்திருக்கும் வீடியோவில் இருந்த ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கலாம்.

முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .

             3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை காட்டுகின்றன. 3D browser கள் மூலம்  நமது வலைபக்கங்களை பார்க்கும் போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping , Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம்.youtube போன்ற தளங்களில் வித்தியாசம் தெரியும் .இந்த பதிவை 3D browser இல் தான் பதிவிடுகிறேன் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை  .

பல நிறுவனங்கள் இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser இலவசமாக வழங்குகிறது .

முப்பரிமான வசதியுடன் இதில் பல கூடுதல்  அம்சங்கள் உள்ளன   Navigation Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் , ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .

Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .

இன்னும் print ,print preview வசதிகளும் உள்ளன .Screenshot எடுக்கப்பட்ட .இந்த படத்தை பாருங்கள்

இதில் open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை தேர்ந்தெடுக்கலாம் .

இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென  அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு
உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள் . 
இதனை Download செய்ய Click Here
Related Posts Plugin for WordPress, Blogger...