யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.
No comments:
Post a Comment