Monday, January 10, 2011

உங்கள் கணினியில் உள்ள பொருட்களை ரகசியமாக ஒரு டிஸ்கில் மறைப்பது எப்படி?





secret disk என்னும் மென்பொருள் உங்கள் கோப்புகள்,ஒளித்தோற்றம்,புகைப்படங்கள் என அனைத்தையும் ஒரு டிஸ்கில்(disk) இரகசிய காவர்சொல்லுடன்(password) அந்த டிஸ்கினை மறைத்து விடும்.இது உங்களின் சாதாரண டிஸ்கை போலவே செயல்படும்.நீங்கள் அந்த டிஸ்கினை காவர்சொல்லுடன் திறந்த பின்பு அது 'x' என்ற வார்த்தையுடன் காணப்படும்(படத்தில் காணப்படுவது போல)

இதனை நீங்கள் தரவிறக்கம் செய்ய கிழே சொடுக்கவும்:-
http://www.mediafire.com/?tjnohmondao

ஒரு இலவச இணைய வடியமைப்பு மென்பொருள்-amaya

இந்த அமையா(amaya) மூலம் இணையப் பக்கங்களை எளிதாக வடிவமைக்கலாம். css வடிவாக்குதலையும் இந்த மென்பொருள் செய்யும்.HTML மற்றும் PHP தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருளை வைத்து எளிமையாக வலைப் பக்கங்களை வடிவமைக்கலாம்.

இதனைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய:- http://www.thesitewizard.com/reviews/amaya.shtml

வலைத்தள  முகவரி:- http://www.w3.org/Amaya/User/BinDist.html


தரவிறக்கம் செய்ய: http://www.w3.org/Amaya/Distribution/amaya-WinXP-11.3.1.exe

பாடல்களுக்கு வரி சொல்லும் மென்பொருள்!


இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது.நாம் சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக இயக்கியின்(media player) மூலம் ஒரு பாட்டை பாட வைத்தால் இந்த மென்பொருள் அந்த பாடலுக்கான வரியை இணையத்தில் தேடிக் கண்டுப்பிடித்து அந்த ஊட இயக்கியின் கீழ் கொண்டு வந்து சேர்த்து விடும்.இதோ கீழே இருக்கும் படத்தை போன்று

மேலும் இந்த பாடல் வரிகளை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்!இந்த மென்பொருள் கீழே உள்ள ஊடக இயக்கியை எல்லாம் ஆதரிக்கும்(support)

Winamp
Windows Media Player
Zune software
Foobar2000
Apple iTunes
RealPlayer
VLC Media Player
Songbird
Quintessential Player
Spotify
MediaMonkey
The KMPlayer
JetAudio
Yahoo! Music Engine
J. River Media Center
J. River Media Jukebox
XMPlay
AIMP2
Helium Music Manager
AlbumPlayer
Silverjuke
BSPlayer

தரவிறக்கம் செய்ய:-

http://www.mediafire.com/?t4zcnzdmndn

Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?


நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare,Ziddu,Mediafire.....
போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுவதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம்.ஒரே நேரத்தில் இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது.இது போன்ற நிலையில் நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது.சரி இதிலிருந்து தப்பித்து எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!

இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது.
http://www.brothersoft.com/jdownloader-171166.html

இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.rapidshare,megaupload,Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில் Rapidshare,Megaupload இணைப்பை(link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால் அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும்.மேலும் இந்த மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.அந்த கூட்டுறுபை தரவிறக்கம் செய்ய இங்குச் செல்லவும்.

Sunday, January 9, 2011

ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்

நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த தளத்தில் உள்ள வசதிகள் சில

1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .

2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .

3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.

4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.

5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.



வலைத்தள சுட்டி

Saturday, January 8, 2011

விண்டோஸ் மீடியா பிளேயரை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய

நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம். ஆனால் இந்த விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய முடியும். இதுவரை நாம் CD/DVD-க்களை ரைட் செய்ய நீரோ போன்ற எதாவதொரு எழுதியை பயன்படுத்தியே CD/DVD-க்களை ரைட் செய்வோம். அப்படி இல்லாமல் விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தியே ரைட் செய்ய முடியும். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் வலதுபுறமாக உள்ள BURN என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.  OPTION பட்டனை தேர்வு செய்து Data CD/DVD Audiao Cd போன்ற தேர்வுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.


பின் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு பின் எந்த டேட்டாவினை ரைட் செய்ய வேண்டுமோ அதனை Drag and Drop செய்ய வேண்டும்.

பின் Start Burn என்ற பட்டனை அழுத்தவும். பிறகு Cd- யில் டேட்டாவானது பதியப்படும்.

விண்டோஸ்-7ல் அனைத்துவிதமான பைல்களையும் பார்க்க அருமையான மென்பொருள்-Universal File Viewer


நாம் பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும் இதற்கு என்று உள்ளதுதான் Universal FilevViewer என்னும் மென்பொருள் ஆகும். இது ஒரு Freeware மென்பொருள் ஆகும். நாம் மைக்ரோசாப்ட் ஆப்பிஸில் உருவாக்கிய மெபொருளை பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் மென்பொருள் நம்து கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ பிளேயர் வேண்டும். MP3 பாடல்களை கேட்க வேண்டுமெனில் ஒரு ஆடியோ பிளேயர் வேண்டும். படங்களை பார்க்க போட்டோ Viewer வேண்டும் அப்படி இல்லாமல் அனைத்து வசதிகளையும் நாம் ஒரே மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் நான் போட்டோவினை ஒப்பன் செய்து, பார்க்க முடிகிறது. அதே போல வீடியோ மற்றும் ஆடியோவினை இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்ட பிறகு நீங்கள் மற்ற மென்பொருட்களின் உதவி இல்லாமல் View (பார்க்க) முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...