கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் என்ன வகையான உணவு எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அழகான குழந்தையை பெற்றெடுக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் என அனைத்தையும் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பூமிக்கு அழகான குழந்தையை பெற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பயிற்சிகள், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து , மாத்திரைகள் என அனைத்தையும் காலண்டர் மூலம் குறித்து கூறுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.medhelp.org/land/pregnancy-calendar
இத்தளத்திற்கு சென்று Join now என்ற பொத்தானை சொடுக்கி தாய்மார்கள் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் தற்போது எத்தனை மாதம் ஆகிறது , எந்தெந்த நாட்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று இங்கு இருக்கும் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரிக்கிறது என்பதில் தொடங்கி சாப்பிட வேண்டியது என்ன, தவிர்க்க வேண்டியது என்ன , என்பது வரை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர கர்ப்ப காலத்தில் இருக்கும் மற்ற தாய்மார்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மருத்துவ முறையையும் பகிர்ந்து கொள்ளலாம், கர்ப்ப காலத்தில் இருக்கும் தாய்மார்கள் அழகான குழந்தை பெற்றெடுக்க பயனுள்ள பல அறிவுரைகளை இத்தளம் வழங்குகிறது.
நன்றி: வின்மணி
No comments:
Post a Comment