தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யவேண்டும் ...
நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...
moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .
தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம்
முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .
வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வாய்ப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பும் உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...
Friday, October 22, 2010
கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner
நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ Game சாப்ட்வேர் அல்லது நமக்கு தேவையான சாப்ட்வேர்களை புதிதாக நிறுவி இருப்போம் .ஒவ்வொரு software நம் கணிணியில் நிறுவும் போதும் முதலில் தேவையான இடம் harddisk ல் இருக்கிறதா என முதலில் பார்க்கும், பிறகு அங்கு அதன் entry பதிவுசெய்யும் நமது கணிணி ஒவ்வொரு முறை boot ஆனதும் முதலில் இந்த register entry சரிபார்த்து நம் நிருவியுள்ள சாப்ட்வேர்களை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் .சிலநாட்களில் ஒருசில சாப்ட்வேர் களை Delete செய்து அடுத்த சாப்ட்வேர் நிறுவுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.
ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் அங்கு சென்று சில நொடிகள் சோதித்து பின் செயல்பட தொடங்கும் .நாம் Uninstall செய்து நீக்கிய அந்த சாப்ட்வேர் registry error இதற்க்கு காரணம் இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க registry cleaner எனப்படும் சாப்ட்வேர் இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம் .
கீழே உள்ள லிங்க் மூலம் அதனை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். இன்னும் புது Version கள் உள்ளன ஆனால் அவை இலவசமாக கிடைப்பதில்லை .
Free Registry Cleaner 4.20.9 freeware download
கீழே உள்ள லிங்க் மூலம் அதனை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். இன்னும் புது Version கள் உள்ளன ஆனால் அவை இலவசமாக கிடைப்பதில்லை .
Free Registry Cleaner 4.20.9 freeware download
இதனை உங்கள் கணிணியில் நிறுவி ஒருமுறை உபயோகித்து பாருங்கள் உங்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும், எத்தனை error காட்டும் அதை நீக்கியதும் உண்மை வேகம் தெரியும் கணிணியில் இருக்கவேண்டிய அவசியமான ஒன்று....
பயன்பாடுகள் :Registry clean startup manager,uninstall manager ,process manager என இவற்றை நிர்ணயிக்கும் வசதியும் உண்டு .. Uninstall manager-- தேவையற்ற software uninstall செய்ய பயன்படும் task manager சென்று நீக்க தேவை இல்லை .இதனை கணிணியின் கிங் என்று சொல்லலாம் ..
உங்கள் நண்பர்களின் கணிணியில் நிறுவி அவர்களுக்கு இதனை பயன்படுத்தி காண்பித்து ஆச்சர்யம் அளிக்கலாம் அந்த அளவிற்கு உபயோகமானது..
கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க

நமது கணிணியை குழந்தைகள் அல்லது பிறரோ பயன்படுத்தும்போது அவர்கள் என்னென்ன தளங்களுக்கு செல்கின்றனர் அவர்களின் username , password உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கலாம் .
கணிணியில் உள்ள keyboard ல் அவர்கள் type செய்யும் அனைத்தையும் இந்த software பதிவுசெய்துகொள்ளும் . இதன்மூலம் அவர்கள் செல்லும் விரும்பத்தகாத தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்யலாம் ,
இந்த keylogger இன்ஸ்டால் செய்துருப்பதை Desktop, Add/Remove Programs, Control pane போன்றவற்றிலும் கண்டறியமுடியாது என்பது இதன் சிறப்பாகும். ஒன்றிற்கு மேற்பட்ட user களை கண்காணிக்கலாம் .
செயல்படும் விதம்:
கணிணியில் நிறுவி start & stop time கொடுத்து விடுங்கள் , கணிணியில் உள்ள keyboard செயல்பாடுகளை கண்காணித்து பதிவுசெய்துகொள்ளும் இதில் நாம் mail Id கொடுத்தால் அந்த முகவரிக்கு யாரும் படிக்கமுடியாத வகையில் Encrypted Format அனுப்பிவிடும் நாம் அதனை பார்த்து முழுவிபரங்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டறியமுடியும் ..
இதனை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் .
தற்போது username , password கண்டறிய hackkers பயன்படுத்தும் எளியவழி இதுதான் . தற்போது remote installation முறையில் இதனை install செய்துவிட்டால் உங்கள் அனைத்து விபரங்களும் அவர்களுக்கு சென்றுவிடும் . சாட்டிங் போது hackers கவனத்தை திசைதிருப்பி இன்ஸ்டால் செய்துவிடுவார்கள் இதனை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாது என்பதால் உங்கள் கணிணியில் பிறர் இதனை நிறுவி கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது . இது இலவசமாக பலதளங்களில் கிடைப்பது கூடுதல் தகவல் .
எனவே உங்கள் கணிணியில் keylogger software நிறுவப்பட்டுள்ளதா ? என்பதை தெரிந்துகொள்வது அவசியம் ....
அடுத்த பதிவில் kelogger உங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ளதா? என்பத கண்டறியும் முறை, குழந்தைகளுக்கு ஏற்ற இணைய தளங்களை மட்டும் பயன்படுத்துமாறு நிறுவுவது எப்படி என அடுத்து காணலாம் ....
இப்போது சில spyware கள் இலவசமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன அவற்றை சாட்டிங் போது இணைய தல முகவரியுடன் இணைத்து அவர்களை click செய்யவைதால் போதும் பிறகு அவர்கள் கணிணி control முழுவதும் நம்கையில் இங்கிருந்தே அவர்களின் monitor நமக்கு தெரியும் அப்புறம் என்ன அதில் புகுந்து விளையாடலாம்.
கடந்த வாரம் chating வந்த கேரள பையனின் கணிணிக்கு spyware அனுப்பி அவனது கணிணியை restart , reboot என கதறவிட்ட என் கல்லூரி நண்பனிடம் எப்படி என்று தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இதுபோன்ற சில தொழில்நுட்ப தகவல்கள்ஒதுக்கிவிடாமல் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதுதான் நம் கணிணி ,வலைத்தளம் போன்றவற்றை காத்துக்கொள்ள முடியும் ..
படித்து பாருங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று
படித்து பாருங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று
பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவ
.முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .
3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை காட்டுகின்றன. 3D browser கள் மூலம் நமது வலைபக்கங்களை பார்க்கும் போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping , Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம்.youtube போன்ற தளங்களில் வித்தியாசம் தெரியும் .இந்த பதிவை 3D browser இல் தான் பதிவிடுகிறேன் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை .
பல நிறுவனங்கள் இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser இலவசமாக வழங்குகிறது .
முப்பரிமான வசதியுடன் இதில் பல கூடுதல் அம்சங்கள் உள்ளன Navigation Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் , ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .
Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .
இன்னும் print ,print preview வசதிகளும் உள்ளன .Screenshot எடுக்கப்பட்ட .இந்த படத்தை பாருங்கள்
இதில் open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை தேர்ந்தெடுக்கலாம் .
இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு
உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள் .
இதனை Download செய்ய Click Here
இதனை Download செய்ய Click Here
ஒரு கணனியை இன்னுமொரு கணனியில் இருந்து இயக்க...........

ஒரு கணனியை இன்னுமொரு கணனியில் இருந்து இயக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய இலவச மென்பொருள்...உதாரணம்;- உங்களால் இன்று அலுலகம் செல்லமுடியாத நிலை அலுவலகத்தில் உள்ள கணனியில் ஒரு வேலையை செய்யவேண்டிய நிலைமை வரும்போது இப்படியான சர்ந்தர்ப்பங்களிலும்,பெற்றோர்கள் பிள்ளைகள் இணையத்தை தவறாக பயன்படுத்துவதை இன்னும்மொரு கணனி மூலம் பார்க்க இந்த மென்பொருள் பெரிதும் உதவும்..................
இங்கே அழுத்தவும்
இணையத்தில் தகவல்களை சேமிக்க உதவும் (Virtual hard drive) சேவைகள்.
நம் கணினியில் நாம் பயன்படுத்தும் கோப்புகளை உடனுக்குடனே இணையத்தில், நமது ஜிமெயில் கணக்கிலும் ஹாட்மெயில் கணக்கிலும் சேமித்துக்கொள்ளலாம். இதற்கென கிடைக்கும் சிறு மென்பொருள்களை நமது கணினியில் நிறுவிக்கொண்டாலே போதும்.
இந்த டிரைவ்கள், நம் கணினியில் C:, D: போலவே இவைகளும் My Computer - ஐ திறந்தவுடனே தெரியும். நமது லோக்கல் டிரைவைப்போலவே காட்சியளிக்கும். நமக்கு தேவையான கோப்புகளை, இதற்குள் இழுத்துப்போட்டுக்கொள்ளலாம் (drag and drop). இவை நேரடியாக நமது இணைய கணக்கில் சேமிக்கப்பட்டு விடும். எங்கு சென்றாலும் இந்த டிரைவை அணுகி கோப்புகளைப்பெறலாம்.
ஜிமெயில் டிரைவ் பதிவிறக்க : இங்கே.
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் பதிவிறக்க : இங்கே
இந்த பதிவை எழுதும்போது கீழ்க்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தொழில்நுட்பம் சம்பந்தமான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. இனி ஒவ்வொரு பதிவின்போதும் கடின வார்த்தைகளை பட்டியலிடலாமென இருக்கிறேன். தயவு செய்து, அதற்குரிய சரியான தமிழ் வார்த்தைகள் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்களேன்.
இந்தப்பதிவிற்கான வார்த்தைகள்:
drive
virtual drive
local drive
online service
storage
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் பதிவிறக்க : இங்கே
இந்த பதிவை எழுதும்போது கீழ்க்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு தொழில்நுட்பம் சம்பந்தமான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. இனி ஒவ்வொரு பதிவின்போதும் கடின வார்த்தைகளை பட்டியலிடலாமென இருக்கிறேன். தயவு செய்து, அதற்குரிய சரியான தமிழ் வார்த்தைகள் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்களேன்.
இந்தப்பதிவிற்கான வார்த்தைகள்:
drive
virtual drive
local drive
online service
storage
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
இணையதள முகவரி : http://www.pdfmyurl.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
Subscribe to:
Posts (Atom)




